Ads Area

கல்முனையில் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி பொது மக்கள் த்டுப்புசியினை பெற ஆர்வத்துடன் வருகை..!

 ( எம். என். எம். அப்ராஸ்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவில் 30வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும்  முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் கல்முனை தெற்கு சுகாதார  வைத்திய பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் மருதமுனை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் இன்று (07/09/2021) இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் ,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் அஸ்மி தலைமையில் கல்முனை பிரதேசத்தில் அல் - பஹ்ரியா  தேசிய பாடசலை மற்றும் அல்- அஸ்ஹர் வித்தியாலயத்திலும் ,மருதமுனை பிரதேசத்தில் அல் - மனார் மத்திய பாடசாலை மற்றும் அல்- மதீனா வித்தியாலயம் ஆகியவற்றில் கிராம சேவகர் ரீதியாக பிரிக்கப்பட்டு  பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இதனடிப்பையில் கல்முனை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசியை இன்று (07)பெற்றுக் கொண்டனர்.

தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொதுசுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், செயலணி பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் சுழற்ச்சி முறையில் கல்முனை தெற்குசுகாதார பிரிவில் உள்ள ஒவ்வொரு பிரதேசங்களில் கிராம அலுவலர் ரீதியாக பிரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஒழுங்கமைப்புக்கள்  மிகவும் நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டதை காணக்கூடியதாய் இருந்தது.

இதன் மூலம்  சிரமமின்றி  பொது மக்கள் மிகவும் இலகுவாக தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதுடன் சுகாதார துறையினருக்கு நன்றியினை தெரிவித்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe