Ads Area

மறக்கப்பட்டிருந்தவர்கள் 20 வருடங்களுக்கு பின்பு திடீரென கவலையுடன் நினைவு கூறப்பட்ட அதிசயம்.

இருபது வருடங்களுக்கு முன்பு அதாவது 2000.10.02 மூதூரில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் புலிகளால் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் மு.கா வேட்பாளர் எம்.எல். பைத்துல்லாஹ் உட்பட 26 பேர்கள் கொல்லப்பட்டு, 39 பேர் காயமடைந்தனர். 

முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் அதன் வளர்ச்சிக்காக அதிக எண்ணிக்கையான போராளிகளை பலி கொடுத்த சம்பவம் இதுவாகும்.    

இவர்கள் கொல்லப்பட்டு இருபது வருடங்களில் இதுவரையில் கட்சியினால் உத்தியோகபூர்வமாக நினைவு கூறப்பட்டதில்லை. 

அத்துடன் கட்சி செல்வம் கொழித்து அதி உச்ச அதிகாரத்தில் இருந்தபோது இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் ஏதாவது நன்மையடைந்தார்களா என்றும் தெரியவில்லை. 

ஆனால் இருபது வருடங்கள் கழிந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைத்தளங்களில் நினைவு கூறப்பட்டதானது அனைவரையும் ஆச்சர்யமடைய செய்தது. 

அதுவும் கவலையுடன் நினைவு கூறப்பட்டார்களாம். இவ்வளவுகாலமும் இல்லாத கவலையும், கக்கிசமும் இருபத்தியொரு வருடங்களுக்கு பின்புதான் வந்திருக்கிறது.  

தலைவர் அஷ்ரப் நினைவு கூறப்பட்டது போன்று கடந்த ஒவ்வொரு வருடமும் இவர்கள் நினைவு கூறப்பட்டிருந்தால், அதனை உண்மை என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இப்போது தலைவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், திடீரென இவர்கள் நினைவு கூறப்பட்டதன் மூலம் இதுவும் அரசியலாகவே பார்க்கப்படுகின்றது. 

தலைவர் அஸ்ரபின் காலத்தில் இவ்வாறு மரணித்தவர்களுக்கு அமைச்சரவை அனுமதியுடன் பல இலட்சம் ரூபாய்களும், இதர விஷேட சலுகைகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால் எமது இன்றைய தலைவரினால் என்ன செய்யப்பட்டதென்று தெரியவில்லை. 

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe