Ads Area

குவைத்தில் செவிலியராக பணிபுரிந்த இந்தியப் பெண் ஒருவர் துாக்கில் தொங்கி தற்கொலை.

குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செவிலியராக வேலை செய்து வந்த இந்தியாவை சேர்ந்த ஜஸ்லின்(வயது-35) என்ற பெண்மணி Ibn-Sina மருத்துவமனையின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த துயரமான சம்பவம் நேற்று(01/10/21) சனிக்கிழமை மாலையில் நடந்துள்ளது. 

தற்கொலை செய்துக்கொண்ட ஜஸ்லினுக்கு சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் உடல்நிலை குறித்த வழக்கமான பரிசோதனைக்காக நேற்று மீண்டும் Ibn Sina மருத்துவமனைக்கு வந்தார் என்று கூறப்படுகிறது. 

மருத்துவமனைக்கு வந்த அவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இந்த துயரமான முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவருடைய கணவர் பெயர் சிஜோ மற்றும் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

தற்கொலை செய்த ஜஸ்லின் இந்தியா கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் அடுத்த இரிஞாலிக்குடா பகுதியை சேர்ந்தவர் ஆவார். சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை தாயகம் எடுத்துச்செல்ல தேவையான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 

News from - /www.arabtamildaily.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe