கிழக்கு மாகாண சபையின் (PSDG) நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச சபையினால் மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் உக்கக்கூடிய கழிவுகளை சேகரிப்பதற்கான மூடியுடனான வாளி (Bin) சம்மாந்துறை 6ம் வட்டாரத்தில் வீடு வீடாக வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் வழிகாட்டலில்
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம்.றியாஸ் அவர்களின் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், தொழில் நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.முஸ்தபா, எம்.பி.எம்.ஜெசீர், மேற்பார்வை உத்தியோகத்தர்களான எம்.வை.இஜாஸ், எம்.எம்.நெளஷாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது 500 வீடுகளுக்கு முதல்கட்டமாக மூடியுடனான வாளி ( Bin) வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.