Ads Area

முகமது நபியை குறித்த கேலிச்சித்திரத்தை வரைந்தவர் விபத்தில் மரணம்.

 முகமது நபி குறித்த சர்ச்சை கேலிச்சித்திரத்தை வரைந்த சுவீடனின் கேலிச்சித்திரக் கலைஞர்  வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

நாயின் உடலில் முகமட் நபியின் தலையைப் பொருத்தி கேலிச்சித்திரம் வரைந்த லாஸ் வில்க்ஸ் என்பவரே கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் டிரக்கொன்று டன் மோதியது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது இரண்டு பொலிஸாரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தெரியவில்லை. ஆனால் விபத்தில் எவருக்கும் தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2007 இல் வெளியான கேலிச்சித்திரத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈராக்கின் அல்ஹைதா அவரை கொலை செய்பவர்களிற்கு சன்மானத்தை அறிவித்திருந்தது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe