துபாயில் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்ற மஹ்சூஸ் டிராவில் முதல் முறையாக ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் முதல் பரிசான 50 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை (இந்திய மதிப்பில் 100 கோடி) வென்றுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த மஹ்சூஸ் டிராவில் இது வரையிலும் முதல் பரிசான 50 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை யாரும் வென்றிருக்காத நிலையில், நேற்று முதல் ஆளாக 50 மில்லியனை ஒருவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மஹ்சூஸ் குழுவினர் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்த செய்தியில், “இன்று இரவு நாங்கள் 50 மில்லியன் வெற்றியாளரை பெற்றோம்!! நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் பரவசமாகவும் இருக்கிறோம். நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை விவரிக்க கூட முடியாது!! இன்றைய இரவின் டிராவில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
முதல் பரிசுத்தொகையான 50 மில்லியன் தவிர, ஆறு பேர் இரண்டாம் பரிசான 2 மில்லியனை வென்றுள்ளனர். அவர்களுக்கு தலா 333,333 திர்ஹம் வழங்கியுள்ளதாகவும், மூன்றாம் பரிசை பெற்ற 185 பேருக்கு தலா 1,000 திர்ஹம் பரிசும், 3,456 பேருக்கு 35 திர்ஹம் பரிசும் வழங்கியுள்ளதாக மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - www.khaleejtamil.com