கொவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களைப் பெறாதவர்கள் உள்ளூர் சுகாதார அலுவலரைத் தொடர்பு கொண்டு தடுப்பூசியைப் பெறுவதற்காக முன்பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசி பெறாதவர்கள் சமூகத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும் நவம்பர் 1 முதல் கொவிட் தடுப்பூசியின் 3ஆம் டோஸை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாடு எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் இத்தடுப்பூசியின் 1 மில்லியன் டோஸ்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாட்களில் பொதுமக்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.