Ads Area

அமீரகத்திலிருந்து டெல்லி வந்த இரண்டு பயணிகளிடமிருந்து 73 ஐபோன்கள் பறிமுதல்.

சம்மாந்துறை அன்சார்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமீரக ஷார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட புதிய வகையான ஐபோன்களின்களை டெல்லி சுங்கத்துறை நேற்று திங்கள் கிழமை கைப்பற்றியது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஷார்ஜாவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த இரு பயணிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் போது பயணிகள் மற்றும் அவர்களது லக்கேஜ்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டன.

இந் நிலையில் இரண்டு பயணிகளிடமிருந்து 73 ஐபோன்-13 (iPhone-13) (வெவ்வேறு மாடல்கள்), தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட ஒரு வெள்ளை தங்க மோதிரம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe