Ads Area

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவின் மீதான தண்டனை சட்டங்களில் தளர்வு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் குற்றவியலுக்கான தண்டனை தொடர்பான சட்டங்களை மேம்படுத்தும் விதமாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஃபெடரல் க்ரைம் மற்றும் தண்டனைச் சட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அங்கீகரித்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டமியற்றும் முறையை மேலும் மேம்படுத்துவதையும், செம்மைப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட சட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் அரசாங்க ஊடக அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் இந்த புதிய சட்டமானது பெண்கள் மற்றும் வீட்டு வேலையாட்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குதல், பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துதல் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகளுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்குதல் போன்ற சட்டங்களுடன் வரும் ஜனவரி 2, 2022 முதல் முழுமையாக இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(www.khaleejtamil.com)




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe