Ads Area

சம்மாந்துறை சமூக இளைஞர் முகாமைத்துவ ஒன்றியத்தின் ( SYMA ) மூன்றாவது வருட பூர்த்தியை முன்னிட்டு மேலங்கி அறிமுகம்.

 ( எம். என். எம். அப்ராஸ்  )

சம்மாந்துறை சமூக இளைஞர் முகாமைத்துவ ஒன்றியத்தின் ( SYMA ) மூன்றாவது  வருட பூர்த்தியை முன்னிட்டுஅமைப்பின் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய மேலங்கி அறிமுகம் செய்து  வைக்கும் நிகழ்வுஅமைப்பின் தலைவர்  எம். அப்காஸ்  தலைமையில் சம்மாந்துறை  தனியார்  விடுதியொன்றில் நேற்று (29) இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதி யாக   சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளிம்,சம்மாந்துறை பிரதேச செயலகஇளைஞர் சேவை அதிகாரி பைசல் அமீன் ,ஆசிரியர்களான பவுஜான் , நஜீமுதீன், ருபைஸ்தீன் ரணீஸ் உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டார்கள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe