சாய்ந்தமருது அல்-ஐலால் வித்தியாலயத்தின் பழைய மாணவரும்அண்மையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக இளவயதில் நியமனம் பெற்ற பேராசிரியர் கலாநிதி. றமீஸ் அபூபக்கர் அவர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வுகள் கட்டம் கட்டமாக ஒவ்வொரு பிரதேச மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக சாய்ந்தமருதின் பிரபலமான விளையாட்டு துறையில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தையும் வரலாற்று சாதனைகளை பெற்ற
சாய்ந்தமருதுரின் முதுமையான விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின்
ஏற்பாட்டில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது 2021.11.27 (சனிக்கிழமை) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் மாலை 6:00 மணிக்கு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் விழாவுக்கான நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கின்றது.
கெளரவிப்பு விழாவின் சிறப்பம்சம் யாதேனில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி. றமீஸ் அபூபக்கர் அவர்கள் சாய்ந்தமருது அல்-ஐலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதுடன் அவர் கற்ற கல்லூரியில் வைத்து கெளரவிப்பு நிகழ்வு நடைபெறுவதானது உபவேந்தருக்கும் சாய்ந்தமருது அல்-ஐலால் வித்தியாலயத்திக்கும் கிடைக்கப்பெறும் கெளரவமாகும்.
ஊடக செய்திகளுக்காக..!
முஸ்தபா முபாறக்

