Ads Area

குவைத் ஷர்க் பகுதியில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து இந்தியர் ஒருவர் மரணம்.

குவைத்தில் ஷர்க் பகுதியில் உள்ள குடியிருப்பு மாடி ஒன்றிலிருந்து விழுந்து இந்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார், இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குவைத் உள்துறை அமைச்சகத்திற்கு ஷார்க் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஐந்தாவது மாடியில் இருந்து ஒரு நபர் கீழே விழுந்தது பற்றி அழைப்பு வந்துள்ளது. மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலைப் பரிசோதித்தபோது அவர் மரணம் அடைந்தது தெரியவந்தது. ​

முதற்கட்ட விசாரணையின்படி, தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் எனவும், அவர் இந்தியர் என்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள அவரது குடியிருப்பின் ஜன்னலில் இருந்து விழுந்துள்ளார்.  குற்றவியல் சந்தேகத்துடன், வழக்கு பதிவு செய்யப்பட்டு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe