Ads Area

கிழக்கிலுள்ள அனைத்து படகுப் பாதைகளின் தரம் குறித்து சோதனை செய்ய நடவடிக்கை.

கிழக்கு மாகாணத்தில் தற்போது இயங்கி வரும் அனைத்து படகுப் பாதைகளின் தரத்தையும் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவு, பொலிஸ் மற்றும் கடற்படையின் குழுவொன்று இதற்காக நியமிக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

அண்மையில் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் படகுப் பாதை  கவிழ்ந்ததில் காயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவோரை இன்று காலை  கிண்ணியா வைத்தியசாலையில் பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe