பாதுகாப்பான நாடு மற்றும் நகரங்களின் பட்டியலில் உலகளவில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் அமீரகம் தற்பொழுது மக்கள் வசித்து வரும் நாடுகளின் பாதுகாப்பு குறித்த மற்றுமொரு கணக்கெடுப்பில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
Gallup இன் 2021 உலகளாவிய சட்டம் மற்றும் ஒழுங்கு அறிக்கையின்படி, அமீரகத்தில் வசிப்பவர்களில் சுமார் 95 சதவீதம் பேர் நள்ளிரவில் தனியாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்த குறிப்பிட்ட பிரிவில் அமீரகத்திற்கு அடுத்தபடியாக நார்வே 93 சதவீதம் சீனா மற்றும் ஸ்லோவேனியா 91 சதவீதம் பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பெண்கள் நள்ளிரவில் எவ்வித அச்சமின்றி நடமாடக்கூடிய நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமீரகத்தில் வசிப்பவர்கள் இரவில் பாதுகாப்பாக தனியாக நடக்கலாம். பாதுகாப்பு என்பது ஒரு ஆசீர்வாதம் மற்றும் பாதுகாப்பு என்பது அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை. ஒரு பெண் தனியாக, பகலிலோ அல்லது இரவு நேரத்திலோ பயமின்றி நடக்க முடியும் என்று சொன்னால், அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
அத்துடன் “அல்லாஹ் இந்த நாட்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் தொடர்ந்து இருக்க அருள்புரியட்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Thanks - Khaleej Tamil.

