Ads Area

குவைத்தில் ஆண்டுக்கு சராசரியாக 211 வெளிநாட்டினர் எய்ட்ஸ் (AIDS) காரணமாக நாடு கடத்தப்படுகிறார்கள்.

சம்மாந்துறை அன்சார்.

குவைத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 2010 - 2019 இல் எய்ட்ஸ் உள்ளிட்ட தொற்று நோய்க்கான இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 23,733 பேர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நாடு கடத்தப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக குவைத் அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது. 

குவைத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 211 வெளிநாட்டினர் எய்ட்ஸு தொற்று காரணமாக நாடு கடத்தப்படுவதாகவும் அப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் குவைத்தில் மலேரியா, ஃபைலேரியாசிஸ், காசநோய், ஹெபடைடிஸ் பி மற்றும் சி (Malaria, Filariasis, Tuberculosis, Hepatitis B and C.  ) ஆகிய நோய்கள் கண்டறியப்படுபவர்களும் நாடு கடத்தப்படுகின்றனர்.

செய்தி மூலம் - http://www.arabtimesonline.com





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe