துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த 48 வயதான கணேஷ் ஜெயராமன் என்பவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டையொட்டி நடைபெற்ற பரிசு குலுக்கலில் 5 இலட்சம் திர்ஹம்ஸ் ரொக்க பரிசை பெற்றுள்ளார்.
இவர் idealz.com இல் 50 திர்ஹமிற்கு விற்பனை செய்யப்பட்ட ubel பேட்ஜை வாங்கியிருக்கிறார். இதனை தொடர்ந்து டிசம்பர் 2 ம் தேதி நடைபெற்ற குலுக்கலில் இவர் முதல் பரிசை வென்றிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் 5 இலட்சம் திர்ஹம்ஸ் வென்றதாக ஃபோன் கால் வந்ததும், என்னால் நம்ப முடியவில்லை. நான் என்னை ஒரு அதிர்ஷ்டசாலி என்று நினைத்ததில்லை. அதிர்ஷ்டத்தை நம்பும் மக்கள், போட்டிகளில் கலந்துகொள்ளுங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தை நேசியுங்கள். எதுவும் சாத்தியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகையை முதலீடு செய்வதோடு நல்ல நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், கணேஷ் ஜெயராமன் தனது சொந்த ஊரில் உணவகத்தைத் திறக்க விரும்பியுள்ளார்.
Idealz மூலம் நடைபெற்ற குலுக்கலில் மொத்தம் 10 வெற்றியாளர்கள் 2 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான பரிசுகளை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Thanks - https://www.khaleejtamil.com/