கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களுக்கும் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு R. டெமட் செகெர்சியோக்லு அவர்களுக்கும் இடையான சிநேக பூர்வமான சந்திப்பு, துருக்கி தூதரகத்தில் இன்று (13.12.2021) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் துருக்கி-இலங்கை நட்புறவு தொடர்பான விடயங்கள் பற்றியும் எதிர்காலத்தில் துருக்கி நாட்டினால் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள முதலீடுகள், இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் துருக்கி கொண்டுள்ள நாட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இச்சந்திப்பில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழிலாதாரங்களை உருவாக்கி வழங்குதல் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான செயற்றிட்ட வரைபுகளை பாராளுமன்ற உறுப்பினர், தூதுவரிடம் கையளித்தார்.
இந்த செயற்றிட்ட வரைபுகளை ஆராய்ந்த தூதுவர் அவற்றை அமுலாக்குவதற்கு ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
மேலும், விரைவில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர், துருக்கிய தூதுவருக்கு அழைப்பு விடுத்தார்.
அழைப்பை ஏற்றுக்கொண்ட தூதுவர் அவர்கள் புதிய ஆண்டின் முற்பகுதியில் வருகை தருவதற்கான தயார்படுத்தல்களை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.