(எஸ்.அஷ்ரப்கான்)
தற்பொழுது நிலவி வரும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமுகமாக ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு நேற்று (05) அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கியதாக சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த இரத்ததான நிகழ்வு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசனின் செயலாளர் மிப்றாஸ் மன்சூரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றஹ்மான் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இங்கு இரத்ததானம் செய்பவர்களை கௌரவிக்கும் வகையில் ஏ.ஆர். மன்சூர் பவுண்டேஷனின் ஞாபகார்த்த கோப்பை (Mug) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஊடக அனுசரணையினை தினக்குரல், கெபிடல் ரீ.வி. கெபிடல் எப்.எம்.,
நியூஸ் ஹவர்ஸ், அறம் முகநூல் தொலைக்காட்சிகள் ஆகியவை வழங்கியிருந்தன.
இங்கு கருத்துத்தெரிவித்த வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றஹ்மான், இவ்வாறு சமூகத்திற்குத் தேவையான முக்கிய பணிகளில் ஏ.ஆர்.மன்சூர் பெண்டேசன் முன்னின்று செயற்பட்டு வருவது பாராட்டத்தக்க விடயம் என்றும் இதுபோன்ற அமைப்புக்கள் முன்னின்று இந்த இரத்த தானம் வழங்குவதற்கும் எமது மக்களின் இரத்தத்தேவையினை நிவர்த்தி செய்து உயிர்காக்க உதவுமாறும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.