ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சில மாதங்களுக்குப் பிறகு LULU குழும தலைவர் யூசுப் அலி தன்னை மீட்டவர்களை இன்று நேரில் சென்று சந்தித்தார்.
பிரபல தொழிலதிபரும், LU LU குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி, கொச்சியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, அவரை விரைந்து வந்த காப்பாற்றிய குடும்பத்தினரை நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
கொச்சியில் உள்ள ராஜேஷ் கண்ணா மற்றும் அவரது மனைவி ஆகியோரை இல்லத்திற்குச் சென்று நேரில் சென்றார்.
பனங்காடு காவல்நிலையத்தில் சிவில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி சதுப்பு நிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தை கண்டு, யூசுப் அலி மற்றும் பிற பயணிகளை காப்பாற்றினர்.
நன்றி தெரிவித்த யூசுப் அலி தம்பதியினருடன் சிறிது நேரம் செலவிட்டார்.
"என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றிய குடும்பத்தை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்று நான் உறுதியளித்தேன்.
நான் சொன்னதைக் கடைப்பிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சில மாதங்களுக்கு முன்பு, தம்பதியைச் சந்திக்க கொச்சி வந்தேன். ஆனால் இருவரும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்ட போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது இதனால் ராஜேஷையும் அவரது மனைவியையும் சந்திக்கத் தவறிவிட்டேன்" என்று யூசுப் அலி கூறினார்.
ஹெலிகாப்டரில் இருந்து தன்னையும் மற்ற பயணிகளையும் காப்பாற்றிய தம்பதிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
"ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளான போது , அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவர் குடையுடன் வந்து ஹெலிகாப்டரில் இருந்து என்னை வெளியே அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் என்னால் நடக்க முடியவில்லை. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் என்னை இறங்க உதவினார்கள். மனிதாபிமானத்தையும் அன்பையும் வெளிப்படுத்தியதற்காக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உதவிக்கு ஈடாக அவர்களுக்கு எந்த வெகுமதியையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
எம்.ஏ.யூசுப் அலி, அவரது மனைவி மற்றும் மூன்று பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஏப்ரல் 11, 2021 அன்று பனங்காட்டில் உள்ள மீன்வளக் கல்லூரி மைதானத்தில் சதுப்பு நிலத்தில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.