Ads Area

“ஒரு வாய் சோறு கொடுக்கலாம்ல” : வெளிநாட்டில் தனியே சிக்கித் தவிக்கும் மணிகண்டனின் கதறல்.


பல ஆண்டுகளாக ஒரு கதை தொடர்கதையாக மாறி வருகின்றது, குடும்பத்தின் நலன்காக்க வெளிநாட்டிற்கு சென்று அங்கு தனியே தவிக்கவிடப்பட்டு சொந்தங்களை பிரிந்து வாடும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை தொடர்கதையாகி உள்ளது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு ராம்நாடு மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மலேசியாவில் உள்ள கிளாங் பகுதிக்கு வேலை வந்துள்ளார். தனது குடும்ப கஷ்டங்கள் எல்லாம் முற்றிலும் மாறப்போகிறது என்ற பல கனவுகளுடன் வெளிநாட்டிற்கு வந்த இவரது வாழ்வில் தற்போது அழுகையே மிஞ்சியுள்ளது. 

Behindwoods நிறுவனம் வெளியிட்ட அந்த காணொளியில், பச்சிளம் குழந்தை போல தான் தனியே தவிக்கவிடப்பட்ட நிலையை தமிழ் பேசும் மக்களிடம் கதறலோடு கூறும் இந்த மணிகண்டனின் கூக்குரல் நெஞ்சை கலங்கடிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் பிரபலமான கிளாங் பகுதிக்கு ஒரு கடைக்கு வேலைக்கு வந்ததாகவும். அப்போது அங்கிருந்த முதலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மிகுந்த அன்போடு பார்த்துக்கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.

ஆனால் ஆரம்பத்தில் குடும்பத்திற்கு மாதாமாதம் பணம் அனுப்பி வந்த அவருக்கு திடீர் என்று என்ன ஏற்பட்டது. அவர் ஏமாற்றப்பட்டாரா?, ஐந்து ஆண்டுகளாக அவர் தாயகம் திரும்பாத நிலையில் எப்படி மலேசியாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. ஆனால் அவரது குடும்பத்தினரின் தொடர் முயற்சியால் தற்போது மலேசியாவில் உள்ள தமிழர்களால் மணிகண்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களை கண்ட மணிகண்டன் “என் மண்ணில் நிற்கும் அந்த மனநிலை தற்போது வந்துவிட்டது, என் சொந்தங்களை பார்த்ததுபோல உணர்கின்றேன்” என்று கூறி கதறும் காட்சிகள் நம்மை கலங்கடிக்கிறது. இணையத்தில் வைரலான் இந்த காணொளியை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை விரைவில் தாயகம் அழைத்துவர வழிவகை செய்யவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் நிச்சயம் அவர் விரைவில் மீட்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe