விவாதத்திற்கான பொருத்தமான தொலைக்காட்சியையும்
பொருத்தமான நேரத்தையும் தெரிவு செய்தல்
கௌரவ சாணக்கியன் அவர்களுக்கு,
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் விவாதிப்பதற்கு என்னால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு முதலில் நன்றி கூறுகிறேன்.
இவ்வாறான விவாதங்களும் நிகழ்ச்சிகளும், மக்கள் அதிகம் பார்க்கக்கூடிய பிரபல்யமான தொலைக்காட்சிகளின் அரசியல் நிகழ்ச்சிகளில், (உதாரணமாக தீர்வு ,மின்னல் போன்றவை) இடம்பெறுவதே சிறப்பானதென நான் கருதுகிறேன்.
இந்த விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்ட மக்கள் உட்பட தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசைகளில், தாங்கள் விரும்பிய ஏதாவதொன்றில் நாம் விவாதிப்பதே சாலப் பொருத்தமானதாக இருக்கும். எனவே எதிர்வரும் வாரங்களில் இவ்வாறான நிகழ்ச்சி ஒன்றில் நாம் பங்கேற்க வசதியாக, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் உங்களின் முடிவை எதிர்பார்க்கின்றேன்.
இந்த விடயம் தொடர்பில் தங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து இருப்பதையும் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன். இவ்வாறு ஹாபிஸ் நசீர் அஹமட் எம்பி இன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.