Ads Area

முன்னாள் மனைவிக்கு ரூ.5,500 கோடி ஜீவனாம்சம் வழங்க துபாய் பிரதமருக்கு இங்கிலாந்து ஐகோர்ட் உத்தரவு...!

 இங்கிலாந்து.

துபாய் பிரதமர் ரஷீத் அல்-மக்தூம் தனது முன்னாள் மனைவி ஹயாவுக்கு ஜீவனாம்சமாக சுமார் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5500 கோடி வழங்க இங்கிலாந்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இங்கிலாந்தைச் சேர்ந்த  இளவரசி ஹயா பின்ட் அல் ஹுசைனை தனது ஆறாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் சையத் (9), ஜலீலா(13) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் இவர்கள் விவாகரத்து செய்தனர். இவர்களது விவாகரத்து  வழக்கு  பிரித்தானியா ஐகோர்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பிரதமர் ரஷீத் அல்-மக்தூம் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.5500 கோடி வழங்க உத்தரவிட்டனர்.

ஷேக் அல்-மக்தூமின் முன்னாள் மனைவியின் பாதுகாப்புக்காகவும், அவர் தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காகவும் இந்த தொகை நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வரலாற்றில் விவகாரத்து வழக்கில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தீர்ப்பாக இது கருதப்படுகிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe