தகவல் - சம்மாந்துறை அன்சார்.
அபுதாபி குற்றவியல் நீதிமன்றம், போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் (psychotropic) பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கவும், குற்றத்திற்கு பயன்படுத்திய கார் மற்றும் தொலைபேசியை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு கொண்டு போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களை ஊக்குவிப்பதில் குற்றம் சாட்டப்பட்டவர் ஈடுபட்டதாக அபுதாபியில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் பிற நபர்கள் மூலம் அவருக்கு அதிக அளவு போதைப்பொருள்களை டெலிவரி செய்வதாகவும், புகைப்படங்கள் மற்றும் தொடர்பு விவரங்களை அனுப்புவதற்கு முன்பு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமான பொருட்களை மறைத்து வைப்பதாகவும், அவர் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தனது போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள அவர் வாட்ஸ்அப்பினை பயண்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.