Ads Area

கட்டாரில் வெற்றிகரமாய் நிறைவுற்ற இலங்கையரின் இரத்த தான முகாம்.

CWF QATAR அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 24.12.2021ம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது. 

குறித்த இரத்ததான முகாமில் கட்டாரில் தொழில் புரியும் பெரும்பாலான இலங்கையைச்சேர்ந்த இளைஞர், யுவதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் குடும்பத்தினரும் கலந்து கொண்டு தங்களின் இரத்தங்களை தனமாக வழங்கினர்.

இவ்விரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற  அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்த HMC-Blood Donation Unit, நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துவதற்குத் தேவையான இடத்தை தந்துதவிய Stafford Sri Lankan School Doha - SSLSD நிருவாக்த்தினர்,  ஊடக சேவையில் சிறப்பான முறையில் உதவிய Ðoha Rádio Támil, සිතුල රේඩියෝ - QFM Sithula 95.30 (QFM), Yazh News Media, Srilankika Qatar Api media மற்றும் எம்மோடு கலந்து சிறப்பித்த FSMA அமைப்பின் தலைவர் சகோதரர் ரினோஸ், ஏனைய அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், இரத்த தானம் செய்த, நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஏனைய  உறவுகள் ஆகிய அனைவருக்கும் CWF QATAR அமைப்பினரும் Area27 Toastmasters Club அமைப்பினரும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, இரத்ததானம் வழங்க வேண்டுமெனும் நன்னோக்கில் குறித்த நேரம் கடந்தும் பல சகோதர, சகோதரிகள் இரத்ததான முகாமிற்கு சமூகமளித்தும், குறித்த நேரத்தில் வந்தவர்களை மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏனையோரை உள்ளே அனுமதிக்க முடியாத நிலைமை இருந்ததையிட்டு அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக மேலும் தெரிவித்தனர்.

முஹம்மது அக்ரம் - கட்டார்

CWF-Qatar Media Unit.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe