Ads Area

பா.உ. முஷாரப் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம், வைத்தியசாலை தேவைகள் குறித்து ஆராய்வு.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் இன்று (27.12.2021) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை  மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தின்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் MHM ஆசாத் அவர்கள், நிர்வாக உத்தியோகத்தர் KM ஜப்பார் அவர்கள் ஆகியோரைச் சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள் பற்றி கேட்டறிந்து கொண்டார்.

இ்ந்த விஜயத்தின் போது, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ACM ஸஹீல் அவர்களும் இணைந்து கொண்டார்.

மேலும் குறித்த சந்திப்பின் போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ளக வீதிகளை செப்பனிட்டு தருவதாகவும் மேலும் வைத்தியசாலையில் அலுவலக வேலைகளை இலகுபடுத்தும் உபகரணங்களையும் பெற்றுத் தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப், வைத்திய அத்தியட்சகரிடம் தெரிவித்தார்.

இதன்போது, சம்மாந்துறை பிரதேசத்தில் "ஒசுசல" - அரச மருந்தகமொன்றை எதிர்காலத்தில் நிறுவுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe