சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் கேரளா மாநிலம், கோழிக்கோடு அடுத்த பேப்பூர் பகுதியை சேர்ந்த முஹம்மது ஜாபிர்(வயது-44), அவரது மனைவி ஷப்னா (வயது-36) மற்றும் குழந்தைகள் லைபா (வயது-7) சாஹா (வயது-4) மற்றும் லுட்ஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேலை மாறுதல் காரணமாக குடும்பத்துடன் கடந்த (03/12/21) வெள்ளிக்கிழமை இரவு தனது ஜுபைலில் இருந்து ஜிசான் (Jizan) நகருக்கு சென்றுக் கொண்டிருந்தபோது இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது. ஜாபிர் கடந்த 18 வருடங்களாக சவுதியில் பணியாற்றி வருகிறார்.
அவர்கள் சென்ற கார் மற்றொரு சவுதி குடிமகனின் வாகனத்தின் மீது மோதியது. இதில் மோதுண்ட சவுதி குடிமகனும் உயிரிழந்துள்ளார். அனைத்து உடல்களும் தற்போது அல்ரைன் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
இறந்த குடும்பத்தினர் உடல்களை இந்திய கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கேரளா வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் முஹமது ரியாஸ் தெரிவித்தார். இதுகுறித்து நோர்காவை(கேரளா வெளிநாடு வாழ் தொழிலாளர்கள் நலத்துறை) தொடர்பு கொண்டு உள்ளனர் எனவும்,மாவட்ட ஆட்சியர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே பேப்பூரில் உள்ள இறந்தவர்கள் வீட்டுக்குச் சென்ற அமைச்சர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa