எம்.எம்.ஜபீர்.
ஜெய்கா திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டு வறுமையை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மூன்றாம் கட்டமாக சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சென்னல் கிராமம்-01,02 மற்றும் வளத்தாப்பிட்டி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் 6.7 கிலோமீற்றர் வீதி வடிகான் வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுத்தீன், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், இவ்வட்டாரங்களின் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சீ.எம்.சஹீல், எஸ்.நளீம், கே.குலமணி, ஜெய்கா திட்ட அதிகாரிகள், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.முஸ்தபா, கிராமசேவக உத்தியோகதர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிகள் உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டனர்.
ஜெய்கா திட்டத்தின் பொறியியலாளர் குழுவினர் இக்கலந்துரையாடலில் இனங்கானப்பட்ட வீதிகளை நாளை திங்கட்கிழமை பார்வையிடவுள்ளதுடன், இத்திட்டத்தினை 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் வீதிகளை ஸ்மாட் டச் (Smart tv Touch) மூலம் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.