கடந்த செவ்வாய்க் கிழமையன்று, நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சட்டம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுக்க உதவுகிறது.
இந்த மசோதாவை அதிபர் செபாஸ்டியன் பினேரா ஆதரித்தா. அவர் அதைச் சட்டமாகக் கையெழுத்திட வேண்டும். ஆனால், அவருடைய பழைமைவாத கூட்டணி உறுப்பினர்களின் விமர்சனத்திற்கு இந்த மசோதா உள்ளானது.
சிலியின் எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நீண்ட காலமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், 2017-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் இயற்றவிடாமல் முடக்கி வந்தது.
சிலி 2015-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு இடையே இருக்கும் சிவில் யூனியன்களை அங்கீகரித்தது. இது அவர்களுக்கு சில சட்டரீதியான பலன்களையும் வழங்கியது.
