2022ஆம் ஆண்டுக்கான அரச துறைக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் வகையில் அடுத்த வருடம் புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் பால் மா இறக்குமதியும் கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.