Ads Area

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் சீசீரீவி (CCTV) கமரா பற்றிய இலவச பயிற்சிநெறி.

 நூருல் ஹுதா உமர்

தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஐக்கிய இளைஞர் சக்தி நடத்த்திய இலவச 𝗖𝗖𝗧𝗩 𝗖𝗮𝗺𝗲𝗿𝗮 𝗜𝗻𝘀𝘁𝗮𝗹𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 ஒருநாள் இலவச பயிற்சி நெறி இன்று புதன்கிழமை (15) கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான கே.ஏ. றிஸ்கான் முகம்மடின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச முக்கியஸ்தர்கள், கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் அடங்களாக பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கிவைப்பட்டது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe