குவைத்தில் வெளிநாட்டவர்கள் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல்லா அல்-தாரிஜி எம்.பி, ஒரு வெளிநாட்டவர் தனது பெயரில் சொந்தமாக மற்றும் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை சமர்ப்பித்தார்.
அவரது முன்மொழிவு அறிக்கையின் படி, குவைத்தில் இருக்கும் வெளிநாட்டினர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இரண்டு வாகனங்களுக்கு மேல் அவரது பெயரில் பதிவு செய்வது தடை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் அதிகமாக ஒவ்வொரு வாகனத்திற்கும் கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்று அவர் தனது முன்மொழிவில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நாட்டில் வெளிநாட்டினர்களுக்கு சொந்தமான பழைய வாகனங்கள் அதிக அளவில் தெருக்களில் சுற்றித் திரிவதால், நெரிசல் மற்றும் போக்குவரத்து விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த கார்கள் பொது மைதானங்கள், பள்ளிகள், மசூதிகள் மற்றும் ஷாப்பிங் மால்களின் வாகன நிறுத்துமிடங்களிலும் இடத்தை ஆக்கிரமித்துள்ளன.
சில வெளிநாட்டவர்கள் தனது பெயரில் 50 கார்கள் வரை வைத்திருப்பதாக செய்திகள் பரவுகின்றன என்றும் அவர் கூறினார்.
தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.