சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் (COVID-19 Omicron) வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங் காணப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய உத்தியோகபூர்வ செய்தித் தளமான Saudi Press Agency (SPA) செய்தி வெளியிட்டுள்ளது.
வட ஆபிரிக்கா நாடு ஒன்றிலிருந்து சவுதிக்கு வருகை தந்த சவுதி குடிமகன் ஒருவரே இவ்வாறு புதிய வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டு தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவரோடு நெறுங்கிய தொடர்பைப் பேணியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி மூலம் - https://english.alarabiya.net

