வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (09) பதவிப்பிரமாணம் செய்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கடற்படைத் தளபதியாக விளங்கிய வசந்த கரன்னாகொட அவர்கள், தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவராவார். அத்துடன்,ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே அவர்களின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, வடமேல் மாகாணப் புதிய ஆளுநர் வசந்த கரன்னாகொட அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.