Ads Area

வரலாற்று சாதனை படைத்தது அம்பாறை மாவட்ட கபடி அணி.

 நூருல் ஹுதா உமர்

தேசிய இளைஞர் கழகங்களின் சம்மேளனம் 33வது தடவையாக நடத்திய தேசிய இளைஞர் விளையாட்டு விழா (2021) வின் ஒரு அங்கமான கபடி சுற்றுப்போட்டி மகரகம உள்ளக விளையாட்டு அரங்கில் செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இப் போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்ட அணியும், கேகாலை மாவட்ட அணியும் பங்குபற்றி அம்பாறை மாவட்ட அணி சாம்பியனாக தெரிவு செய்யப்படது. இப் போட்டியில் அம்பாறை மாவட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மதினா இளைஞர் கழக அணி சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்தது. இந்த அணியை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தன்னுடைய சமூகவலைத்தள கணக்குகளினூடாக வாழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe