நீதியமைச்சின் அமைச்சுசார் ஆலோசணைக் குழுக்கூட்டம் கெளரவ நீதியமைச்சர் அலி சப்ரி அவர்களின் தலைமையில் பாராளுமன்றில் இன்று (08.12.2021) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்கள்,
இறக்காமம் பிரதேசம் உள்வாங்கப்பட்டிருக்கும் நியாயாதிக்க எல்லை தொடர்பாக நீதியமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
இறக்காமம் பிரதேசம் தமிழ் மொழி பேசப்படும் பிரதேசமாகும். இருப்பினும் இது அம்பாறை மாவட்ட நியாயாதிக்க எல்லைக்குள் திணிக்கப்பட்டிருப்பதால் வழக்குகளுக்காக மக்கள் அம்பாறை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகிறது.
இதனால் அம்மக்கள் வழக்குகளுக்காக சட்டத்தரணிகளை நாடுதல், முறைப்பாடுகளை கையளித்தல், வழக்கு நடவடிக்கைகள் போன்றவற்றில் மொழி தொடர்பான பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
ஆகவே, அம்மக்களின் வசதி கருதி தமிழ் மொழி பேசும் இறக்காமம் பிரதேசத்தை அம்பாறை நியாயாதிக்க எல்லையிலிருந்து விடுவித்து அக்கரைப்பற்று நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளடக்குமாறு நீதியமைச்சரை வேண்டிக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த கெளரவ நீதியமைச்சர் அலி சப்ரி அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விரைவாக இப்பிரச்சினை தீர்த்துத் தருவதாக உறுதியளித்தார்.