எஸ் ஜே புஹாது.
தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் போட்டியில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இவ்விருதுக்காக இந்த வைத்தியசாலை விண்ணப்பித்த முதல் முறையிலேயே மூன்றாம் இடத்தை தட்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை விருது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கிடைக்கப் பெற்றுள்ளமை இவ் வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றொரு மைல்கல் என வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.
இந்த உயரிய விருதை பெற்றுக் கொள்ள ஊழியர்கள் அனைவரின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புக்காக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன், மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பணிக்குழாம் அனைவருக்கும் வைத்திய அத்தியட்சகர் விசேடமாக நன்றி தெரிவித்துள்ளார்.