Ads Area

பேராதனை பல்கலைக்கழகத்தினால் தேசியரீதியாக நடாத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் அஹமட் ஜாஸிப் முதலாமிடம்.

( எம். என். எம். அப்ராஸ்  )

பேராதனை பல்கலைகழகத்தின் ரொடெரெக்ட் கழகத்தினால் (Rotaract Club)  தேசியரீதியாக நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் மாணவர்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவன் இல்ஹாம் ஜெஸீல் அஹமட் ஜாஸிப்  முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்காக இம் மாணவனுக்கு  பணப்பரிசிலும் , புலமைப் பரிசிலும் வழங்கப்படவுள்ளது.

சாதனை படைத்த  மாணவனை  கல்லூரி  அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் பாராட்டியதோடு மேற்படி நிகழ்வில் பாடசாலையில் புகைப்பட மற்றும் ஒளிபரப்பு கழகத்தின் பொறுப்பாசிரியர் ஷஃபி எச். இஸ்மாயில், உதவி பொறுப்பாசிரியர்களான எம்.வை.எம்.ரகீப், எம்.எச்.எம்.முஸ்தன்சிர்  ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe