இலங்கையின் 5.1 மில்லியன் குடும்பங்களில் 40 வீதமானவை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த அச்சத்தில் வாழ்கின்றன என இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல பகுதிகளில் சமையலறைகளில் நிகழும் காரணம் தெரியா வெடிப்பு சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழு இன்று கூடியுள்ளது.
ஒரேநாளில் 14 சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்திருந்ததை தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.
நாளாந்தம் பத்து வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுகின்றன இராஜாங்க அமைச்சர் லசந்தஅலகியவண்ண நாடாளுமன்றில்தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 5.1 மில்லியன் குடும்பங்களில் 40 வீதமானவை இதன் காரணமாக அச்சத்தில் வாழ்க்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் நுகர்வோர் பக்கமே உள்ளது விசாரணைகள் முடிவடைந்ததும் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர்தெரிவித்துள்ளார்.
20ம் திகதி கொழும்பில் உள்ள மக்டொனால்ட் உணவகம் தீப்பிடித்தது அதன் பல வெடிப்பு சம்பவங்கள் அல்லது தீப்பிடித்தல் சம்பவங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சில நுகர்வோர் சிலிண்டர்களை வீடுகளிற்கு வெளியே நகர்த்தியுள்ளனர், சமூக ஊடகங்களில் சிலிண்டர்களை எவ்வாறு அவதானமாக கையாள்வது என்ற வீடியோக்கள் வெளியாகின்றன.
கொழும்பில் உள்ள உணவகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மிலிந்த பிரேமசந்திரவின் மனைவி சிறிய காயங்களிற்கு உள்ளானார்.
எனது மனைவி முன்னர் போன்று காணப்படமாட்டார் எனது முழுவாழ்க்கையும் நொருங்கிவிட்டது என மிலிந்த தெரிவித்தார்.
அதிகாரிகள் உடனடியாக ஏதாவது செய்யவேண்டும், அப்பாவி மக்களிற்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு யாராவது பொறுப்பு கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினக்குரல் செய்தி.

