வெளிநாட்டில் வாழ்கையினை தொலைக்கும் நாம் சற்று சுயநலவாதியாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது:
இது இவர் ஒருவருடன் நின்றுவிடவில்லை......
கடந்த முப்பத்தைந்து வருடங்கள் வெளிநாட்டில் தன்னுடைய குடும்பத்திற்காக வாழ்க்கையை தொலைத்தவர் கடைசியில் பட்டினியால் இறந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. கண்ணூரை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவருக்கு கடந்த பல நாட்களாக உணவோ, தண்ணீரோ அவருடைய மனைவி மற்றும் மகள் வழங்கவில்லை. இத்தனைக்கும் ஒரே வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர் என்பது கூடுதல் தகவல். யாருக்காக அவர் தன்னுடைய நல்ல தினங்களை தொலைத்தரோ அவர்களே இவரை கண்டுக்கொள்ளவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் பட்டினியால் இறந்தார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த வீட்டில் உள்ள யாரும்(மனைவி,மகள்) அவரை கண்டு கொள்ளாமல் இறந்தது தெரியாமல் துர்நாற்றம் வீசிய காரணத்தால் பக்கத்தில் உள்ள சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை வந்து நடத்திய பரிசோதனையில் சிதைந்த நிலையில் அவருடைய உடல் வீ்ட்டில் இருந்து மீட்கப்பட்டது. இது இவர் ஒருவருடன் நின்றுவிடவில்லை, பல வருடங்கள் வெளிநாட்டு வாழ்கையை வாழ்த்து,கடைசி காலம் தாய்நாட்டில் மகிழ்ச்சியாக வாழலாம் என்று வருகின்ற பலரது நிலைமை இப்படித்தான்.
தன்னுடைய சந்தோஷங்களை(மகிழ்ச்சியான நாட்களை) குடும்பத்திற்காக மாற்றி வைத்து அவருடைய நலனே(மகிழ்ச்சியே) நம்முடைய மகிழ்ச்சி என்று வாழ்ந்த பலர் நடுத்தெருவில் நிற்பதை நான் இந்த வளைகுடாவில் பார்த்து இருக்கிறேன். வளைகுடா வாசியின் கெத்தில் சுற்றும் நல்ல நாட்களில், நாம் சப்பாத்திக்கும் பணத்தில் சிறிய ஒருபகுதியை உங்களுக்காக சேர்த்து வைக்கின்ற #சுயநலவாதியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை.