தகவல் - சம்மாந்துறை அன்சார்.
போன் கடை உரிமையாளர் ஒருவரை கொலை செய்து அவரிடமிருந்த 158 ஸ்மார்ட் போன்கள், 21,000 திர்ஹம் பணம் மற்றும் 1000 அமெரிக்க டாலர்கள் போன்றவற்றை கொள்ளையிட்ட 2 ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு துபாய் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மொபைல் போன் விற்பனை நிலைய உரிமையாளருடன் பணிபுரிந்த டிரைவர் ஒருவர் தனது நண்பர்களான இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளுடன் சேர்ந்து கடையின் உரிமையாளரை தாக்கி, அவர் யாரையும் உதவிக்கு கூப்பிடாமல் இருக்க, அவரை கட்டி வைத்து அவரது வாயில் டேப்பை ஒட்டி வைத்து அவரது கடையில் இருந்த பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர். உரிமையாளரின் வாயினை டேப்பினை கொண்டு ஒட்டியமையில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இதில் பிரதான குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்றாவது குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது துபாய் குற்றவியல் நீதிமன்றம். மேலும் சிறைத் தண்டனையின் முடிவின் பின்னர் அனைவரும் நாடுகடத்தப்படவும் உள்ளனர்.