முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டி பயண கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.
தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி, முதல் கிலோமீட்டர் வாடகைக்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து ரூ.80 வரை அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனம் (LIOC) ஆகியவற்றால் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக இரண்டு எரிபொருள் விநியோகஸ்தர்களும் அறிவித்துள்ளனர்.
(நியூஸ் வயர்)