INTERPOL ஆல் தேடப்பட்டு வந்த பிரேசில் பெண் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய சந்தேக நபருக்கு INTERPOL சிவப்பு அறிவித்தல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக INTERPOL ஆல் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு பிரவேசிக்க முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.