தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதியில் வேலை செய்யும் பலருக்கு இருக்கும் தொடர்ச்சியான சந்தேகம் என்னவென்றால் “ஒருவருக்கு Final exit வழங்கப்பட்டால் அவர் எவ்வளவு காலத்திற்குல் சவுதியை விட்டு வெளியேற வேண்டும்...?” என்பதாகும். இதற்கான விளக்கத்தினையே இந்தப் பதிவில் சொல்லவிருக்கின்றேன்.
சவுதியில் வேலை செய்யும் ஒருவருக்கு அவரது நிறுவனமோ (கம்பனி) அல்லது கபீலோ ( ஸ்பான்சர்) தொழிலாளியின் ஒப்பந்தக் காலம் முடிந்து பிறகு அல்லது அதற்கு இடையில் Final exit (பைனசல் எக்சிட்) வழங்கினால் அந்த Final exit (பைனசல் எக்சிட்) 60 நாட்களுக்கு செல்லுபடியாகும், குறித்த 60 நாட்களுக்குல் உரியவர் சவுதி அரேபியாவை விட்டு கண்டிப்பாக வெளியேறி விட வேண்டும். அந்த 60 நாட்களுக்குல் அவருக்கு வேறு இடத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் Final exit விசாவினை கென்சல் செய்து புதிய வேலையில் சேர்ந்து கொள்ள முடியும்.
60 நாட்களுக்குல் சவுதியை விட்டு வெளியேறாது விட்டால் அவரது Final exit விசா செல்லுபடியற்றதாகிவிடும் இதற்காக அவர் 1000 சவுதி ரியால் வரை தண்டப் பணம் செலுத்த நேரிடுவதோடு, மீண்டும் பணம் செலுத்தி Final exit Visa பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் ஒருவருக்கு Final exit (பைனசல் எக்சிட்) அடிப்பதற்கு அவரது இகாமா குறுகிய காலத்திற்குல் காலாவதியாகி இருந்தாலும் பரவாயில்லை அவருக்கு Final exit (பைனசல் எக்சிட்) அடிக்க முடியும் ஆனால் அவரது பாஸ்போட் காலாவதியாகாமல் இருத்தல் வேண்டும் அது மிகவும் முக்கியம்.