Ads Area

குவைத்தில் கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்தி வந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது.

குவைத் ஹவல்லி (Hawally) பகுதியில் கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்தி வந்த ஆசிய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஹவல்லி (Hawally) பகுதியில் உள்ள ஒரு  கள்ளச்சாராய தொழிற்சாலையில் ஹவல்லி பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி, மது காய்ச்சிக் கொண்டிருந்த இரண்டு ஆசிய வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து மது தயாரிக்க பயன்படும் பெரிய அளவிலான மதுபானங்கள், கருவிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.  

ஹவாலி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசுவது சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஃபர்ராஜ் அல் ஜூபி திங்கள்கிழமை அதிகாலை குடியிருப்பை சோதனை செய்ய உத்தரவிட்டார், அதனடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

செய்தி மூலம் - https://kuwaitlocal.com மற்றும் kuwait tamil social media.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe