முகமது பின் ரஷீத், முகமது பின் சயீத், மற்றும் பட்டத்து இளவரசர்கள் தேசிய தினத்தையொட்டி புதிய 50 திர்ஹாம் நோட்டுகளை அறிமுகப்படுத்தினர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் மகுட இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான், சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் மற்றும் புஜைராவின் ஆட்சியாளரான ஷேக் ஹமத் பின் முகமது அல் ஷர்கி, உச்ச கவுன்சில் உறுப்பினர் மற்றும் உம்முல் குவைனின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முல்லா, சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் மற்றும் ராசல் கைமாவின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி, ஷார்ஜாவின் பட்டத்து இளவரசரும் துணை ஆட்சியாளருமான பின் முஹம்மது பின் சுல்தான் அல் காசிமி மற்றும் அஜ்மானின் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுஐமி ஆகியோர் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு எமிரேட்ஸ் மத்திய வங்கியில் புதிய 50 திர்ஹாம் நோட்டை அறிமுகப்படுத்தினர்.
இந்தப் புதிய நோட்டின் முன்பக்கம் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் உருவப் படத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. நடுவில் யூனியனின் சிறப்புமிக்க அருங்காட்சியம் மற்றும் கையொப்பமிடும் ஆகிய உள்ளடக்கி தனித்துவமான அச்சிடும் தொழில்நுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டுகள் பார்வையற்றவர்கள் கூட அடையாளம் காண உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 50 திர்ஹாம் நோட்டில் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஏனெனில் இது வாடிக்கையாளர் நம்பிக்கை மேம்படுத்துவதற்கும் கள்ளநோட்டு எதிர்த்துப் போராடுவதற்கு மேற்பட்ட தொழில்நுட்பங்களை மத்திய வங்கி நிறுவியுள்ளது.
இந்தப் புதிய 50 திர்ஹாம் நோட்டுகள் மத்திய வங்கி மற்றும் தானியங்கி செலுத்தும் இயந்திரங்கள் மூலம் எதிர்காலத்தில் புழக்கத்தில் வரும் என தெரிவித்துள்ளன.