Ads Area

"ஈழத்து நூன்" எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய 'தட்டு தாவாரம்' கவிதை நூல் அறிமுக விழா இன்று மாலை கொழும்பில்.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பவள விழா நாயகன் பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், "ஈழத்து நூன்" எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய 'தட்டு தாவாரம்' கவிதை நூல் அறிமுக விழா இன்று புதன்கிழமை (08) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு - 2, முஸ்லிம் காங்கிரஸ் தலைமையக தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவி கலாபூஷணம் புர்கான் பீ. இப்திகார் (எம்.ஏ.) தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் "முனீருள் மில்லத்" பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் கலந்து கொள்வதோடு, நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மல்லியப்பூ சந்தி திலகர், கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.ரி.எம்.ஆஸிம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீன் பெற்றுக் கொள்வதோடு,  டாக்டர் மௌலவி ஜலீல் சுல்தான் (மன்பஈ) திருச்சி மாவட்ட அரசு டவுன், டாக்டர் வி.எஸ்.ஏ. ஷேக் முகமது சுஹைல் (தலைவர், செயலாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி - திருச்சி), திருச்சி டாக்டர் எம்.கே. ஷாஹுல்ஹமீது (ஊடகவியலாளர் -  மணிச்சுடர், மக்கள்குரல்) எழுத்தாளர்களான கே.ஜே.உமர்கயான், பழனி சஹான் ஆகியோர் அழைப்பதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe