Ads Area

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி பட்டறை.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அது சார்ந்த தர ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி பட்டறை.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் வழுகாட்டலில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அது சார்ந்த தர ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான இரு நாள் பயிற்சி பட்டறை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தர உத்தரவாதத்திற்கான மையம் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு (11சனி மற்றும் 12 ஞாயிறு).12.2021 பல்கலைக்கழக  மண்டபத்தில் ஊழியர்கள் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர். ஏ. ஜாஃபர் ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அது சார்ந்த தர ஊழியர்களின் வேலையினை வினைத்திறனாக மேற்கொள்ளும் நோக்கில் இந்த பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பணிச்சூழலில் உற்பத்தி மற்றும் தரமான வெளியீடுகள், நிறுவன கட்டமைப்புகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், பல்கலைக்கழக அமைப்பில் ஊழியர்களின் பங்கு மற்றும் பொறுப்பு, பணி நெறிமுறைகள் மற்றும் நேர மேலாண்மை நடத்தைகள், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அபாயங்கள், மன அழுத்தம் மேலாண்மை, மனித வள முகாமைத்தும் போன்ற பல்வேறு தலைப்புக்களில் துறைசார்ந்த விரிவுரையாளர் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஊடக செய்திகளுக்காக..!  

(முஸ்தபா முபாறக்)





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe