சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய துபாய் குற்றவியல் நீதிமன்றம் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததுள்ளது. அரபி ஒருவருக்கு மசாஜ் செய்து விடுவதாக கூறி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 28,400 திர்ஹம் பணத்தை திருடியதற்காகவே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மசாஜ் விளம்பரத்தினை நம்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி, மசாஜ் கட்டணம் தொடர்பில் பேரம் பேசி விட்டு பாதிக்கப்பட்ட நபர் தொலைபேசியில் பேசிய பெண் குறிப்பிட்ட இடத்திற்கு மசாஜ் செய்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
அங்கு சென்றவுடன் அவரை ஆபிரிக்க நாட்டு கும்பல் ஒன்று தாக்கி அவரிடம் இருந்த வங்கி அட்டையை பறித்து வலுகட்டாயமாக வங்கி அட்டையின் சீக்கிரட் கோட் இலக்கத்தையும் பெற்று அதிலிருந்து 28,400 திர்ஹம் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர் பொலிஸாரிடம் முறையிட்டதனை அடுத்து ஆபிரிக்க நாட்டு பெண் ஒருவரை துபாய் பொலிசார் கைது செய்து அவருக்கு 1 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் மசாஜ் செய்தல் என்ற போர்வையில் பலரிடம் இவ்வாறு பணம் பறிக்கும் நிகழ்வு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது அண்மையில் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமும் இவ்வாறு பணம் பறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும்.
இது தொடர்பான செய்திகளின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
01. துபாயில் மசாஜ் செய்ய சென்ற இந்தியரிடம் ரூ.55 லட்சம் சுருட்டிய பெண் கொள்ளை கும்பல்! https://www.sammanthurai24.com
02. அமீரக சார்ஜாவில் மசாஜ் செய்யச் சென்று மாட்டிக் கொண்ட மற்றுமொரு இந்தியர் - 4வது மாடியிலிருந்து குதித்து காயம் - https://www.sammanthurai24.com