Ads Area

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் யு. ஐ. கிரீன்மெட்ரிக் தரவரிசையில் இலங்கை பல்கலைக்கழகங்களில் நான்காவதும் உலகளாவிய ரீதியில் 318 நிலை.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் யு. ஐ. கிரீன்மெட்ரிக் தரவரிசையில் இலங்கை பல்கலைக்கழகங்களில் நான்காவதும் உலகளாவிய ரீதியில் 318 நிலையினையும் பெற்றுள்ளது.

யு.ஐ. கிரீன்மெட்ரிக் தரவரிசை 2021 இன் பல்கலைக்கழக தரப்படுத்தலில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழகங்களில்  நான்காவது (04) நிலை பெற்றுள்ளது.

இந்த தரப்படுத்தலில் உலகளாவிய ரீதியில் பங்குபற்றிய 700 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் உலகளாவிய ரீதியில் 318 ஆம் இடத்தையும் இலங்கையில் நான்காவது நிலையையும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ஏனெனில் இலங்கையில் உள்ள ஏழு (07) பல்கலைக்கழகங்கள் இந்த தரப்படுத்தலில் பங்குபற்றியபோதும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் 6575 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது.  இளமையான (25 ஆண்டுகள் கடந்துள்ள) 06 பீடங்களை கொண்டதென்கிழக்கு பல்கலைக்கழகம் 04ம் நிலை பெற்றுள்ளமையானது இவ்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி மேண்மைப்படுத்தப்பட்டிருப்பதை காணலாம்.

உபவேந்தர் தூர நோக்காக கொண்ட  மருத்துவ, சட்ட பீடங்கள் வருகின்ற போது வருங்காலங்களில் பல்கலைக்கழகம் மேலும் உயர்வைப்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

மேலும் கடந்த 2020 ம் ஆண்டு யு.ஐ. கிரீன்மெட்ரிக் தரப்படுத்தலில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன்   உலகளாவிய ரீதியில் 331 ஆம் இடத்தையும்  5975 புள்ளிகளைப் பெற்று இந்த இடத்தைப் பெற்றிருப்பதோடு "வெள்ளி நிலை" எனும் தரத்தையும் அடைந்திருக்கிறது.

ஆனாலும் இம்முறை 2021 ல் உலகளாவிய ரீதியில் 318 ஆம் இடத்தையும் 6575 புள்ளிகளைப் பெற்று உலக மற்றும் புள்ளி தரத்தில் உயர்வை அடைந்துள்ளதனை காணலாம்.

எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழக மானியங்கள் திட்டத்திற்கான நிலையான வளர்ச்சி குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துதல், மத்தியப் பல்கலைக்கழகங்களுடன் போட்டியிடும் வகையில் நிலையான வளர்ச்சி குறித்த எங்கள் ஆராய்ச்சியை மேம்படுத்துதல் மூலமாக பல்கலைக்கழகத்தை வளப்படுத்துதனால் நிலையான, தொடரான முதன்மை இடத்தினை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. 

உபவேந்தர் பேராசிரியர். ரமீஸ் அபூபக்கர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தினை கடமையேற்று மிக குறுகிய காலத்தில் இத்தரத்தினை பெற்று இருப்பது அவருடைய ஆளுமையின் வெளிப்பாடு ஆகும்.

இச் சாதனையானது அம்பாறை  மாவட்ட மற்றும் தென் கிழக்கு மக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியாத் தருகிறது.

மேலும் இந்த இடத்தை அடைய அயராது பாடுபட்ட பல்கலைக்கழக உபவேந்தர் அடங்கலாக அனைத்து ஆளுமைகளுக்கும் எமது பாராட்டுக்கள்.

Central TV Sri Lanka Media Networking.

ஊடக செய்திகளுக்காக..!

(முஸ்தபா முபாறக்)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe