சம்மாந்துறை அன்சார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் காணிப்பிரச்சினை தொடர்பில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை நேரடி விவாதத்திற்கு அழைத்திருந்தார்,
பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்களின் விவாத அழைப்பு சாணக்கியம் எம்பி தனது முகநுால் பக்கத்தில் தனுாஸ் நடித்த கர்ணன் படத்தில் இடம் பெறும் பாடல் வரிகளில் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
கண்டால் வர சொல்லுங்க, அவர கையோட விவாதத்திற்கு கூட்டி வாருங்கள். பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், நான் விவாதத்துக்கு தயார். இவ் விவாதம் நேரலையில் ஒலிபரப்பப்படவேண்டும். நான் பாராளுமன்றத்தில் கூறிய கருத்தில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை அது எமது மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.